ரஷ்யாவின் 2 அதிநவீன போர் கப்பல்களை தாக்கிய உக்ரைன்: வெளியாகியுள்ள வீடியோ ஆதாரம்
ரஷ்யாவின் இரண்டு வாசிலி பைகோவ் ரக ராணுவ கப்பல் மீது உக்ரைனிய ஆயுதப்படைகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ரஷ்ய போர் கப்பல்கள் மீது தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் நாளுக்கு நாள் நீடித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ரஷ்யாவுக்கு சொந்தமான வாசிலி பைகோவ்(Vasily Bykov) ரக ராணுவ போர் கப்பல் மீது உக்ரைனிய ஆயுதப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
Reuters
இதில் 2 வாசிலி பைகோவ் ரக ராணுவ போர் கப்பலும் பலத்த சேதமடைந்தது இருப்பதாக உக்ரைனிய விமானப்படையின் முலோபாய கட்டளை தெரிவித்துள்ளது.
வெளியான வீடியோ
இதற்கிடையில் ரஷ்யாவின் இரண்டு வாசிலி பைகோவ் ரக ராணுவ போர் கப்பல்களை மறைமுகமாக உக்ரைன் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில் உக்ரைனின் கடல்சார் ட்ரோன்கள் வாசிலி பைகோவ் ரக ராணுவ போர் மீது தாக்குதல் நடத்த முன்னேறுவதும், போர் கப்பல்கள் எதிர்ப்பு தாக்குதல் நடத்துவதும் பார்க்க முடிகிறது.
Footage of a maritime drone attack on a Russian warship, presumably the "Vasily Bykov", has appeared. pic.twitter.com/6L3LDLrY3P
— NEXTA (@nexta_tv) September 14, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |