ரஷ்ய கடற்படைக் கப்பலை தாக்கும் முயற்சியில் உக்ரைன் தோல்வி
கருங்கடலில் உள்ள முக்கிய எரிவாயு குழாய்களுக்கு அருகே ரஷ்ய கப்பலை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்ய கடற்படை கப்பலை தாக்கிய உக்ரைன்
கருங்கடலில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு குழாய்களில் ரஷ்ய கப்பல் ரோந்து சென்றபோது, ஆறு அதிவேக ட்ரோன் படகுகள் மூலம் ரஷ்ய கடற்படை கப்பலை தாக்க உக்ரைன் தோல்வியுற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கருங்கடலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள TurkStream மற்றும் Blue Stream எரிவாயு குழாய்களின் வழித்தடங்களில் நிலைமையை கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கொடுத்த உத்தரவை 'ப்ரியாசோவி' கப்பல் செயல்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
Russian Defence Ministry/Handout via REUTERS
இந்த நிலையில், ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியா தீபகற்பத்தில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகமான செவஸ்டோபோலில் இருந்து தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் முயற்சி தோல்வி
தாக்குதல் தோல்வியடைந்ததையடுத்து, ப்ரியாசோவி கப்பல் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்துவருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலின் போது, அமெரிக்காவின் RQ-4 Global Hawk ஆளில்லா கண்காணிப்பு விமானம் கருங்கடலின் மத்திய பகுதியில் இருந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Russian Defence Ministry/Handout via REUTERS
துருக்கிக்கு செல்லும் பைப்லைன்கள்
ரஷ்யாவும் துருக்கியும் முறைப்படி டர்க்ஸ்ட்ரீமை ஜனவரி 2020-ல் தொடங்கின. ஐரோப்பாவிற்கு ஒரு போக்குவரத்துப் பாதையாக உக்ரைனைக் கடந்து செல்ல ரஷ்யாவை அனுமதிக்கும் இந்த பைப்லைன், கருங்கடல் மற்றும் துருக்கி வழியாக தெற்கு ஐரோப்பாவிற்கு ரஷ்ய இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்கிறது.
ப்ளூ ஸ்ட்ரீம் பைப்லைன் துருக்கிக்கு ரஷ்ய எரிவாயுவை வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். Join Now