மூன்றாவது நாளாக ரஷ்யா மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்: மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள்
ரஷ்யாவை குறித்து உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் வான்வழித் தாக்குதல்
தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யாவின் எல்லைப்புற நகரான பெல்கோரோட் பிராந்தியத்தின் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உக்ரைனின் இந்த தாக்குதலானது மஸ்லோவா பிரிஸ்தான் என்ற கிராமத்தில் புதன்கிழமை அதிகாலையில் நடைபெற்றுள்ளது.
தாக்குதலுக்கு சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால சேவைகள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தீவிரமாக போராடி வருகின்றனர்.
உக்ரைனின் இந்த தொடர்ச்சியான தாக்குதலால் பெல்கோரோட் பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யாவின் மீதான இந்த தாக்குதலுக்கு உக்ரைன் இதுவரை எந்தவொரு பதிலையும் வெளியிடவில்லை.
அதே நேரத்தில் எல்லை தாண்டிய ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதியடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எரிசக்தி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |