ரஷ்யாவின் 12 எண்ணெய் டேங்கர்களை குறிவைத்து தாக்கிய உக்ரைன்: ஜெலென்ஸ்கி விடுத்திருந்த எச்சரிக்கை
ரஷ்யாவிற்கு சொந்தமான 12 எண்ணெய் டேங்கர்களை உக்ரைனிய படைகள் தாக்கி அழித்துள்ளது.
ரஷ்ய சொத்துக்கள் மீது உக்ரைன் தாக்குதல்
வியாழக்கிழமை அசோவ் கடலில்(Sea of Azov) நிலை நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு ரஷ்ய சொத்துகளை உக்ரைனிய பாதுகாப்புப் படை தாக்கி அழித்துள்ளது.
குறிப்பாக இந்த தாக்குதலில் 12 எண்ணெய் டேங்கர்கள், சரக்கு கப்பல், ஒரு இழுவை கப்பல் மற்றும் நாப்தா முனையம் மற்றும் ரஷ்யாவிற்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கு ஆகியவற்றை உக்ரைனிய படைகள் தாக்கி கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.
ரஷ்யா இந்த போரை தொடர்ந்து நடத்துவதற்கு தாக்கப்பட்ட கப்பல்கள் மற்றும் தளவாடங்கள் மிகவும் இன்றியமையாததாக இருந்ததாக உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்கப்பட்ட எண்ணெய் டேங்கர்கள், ரஷ்ய படைகளுக்கு தேவையான எரிசக்தி மற்றும் உயவுப் பொருட்களை வழங்கி வந்தது. மற்றும் பொருளாதார தடைகளை மீறி கச்சா எண்ணெயை கடத்துவது ஆகிய செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த தாக்குதல் குறித்து தகவல் பகிர்ந்திருந்தார்.
அதில், ரஷ்யாவிற்கு சொந்தமான முக்கியமான எரிசக்தி உள்கட்டமைப்புகளை உக்ரைனிய பாதுகாப்பு படைகள் குறிவைத்து வருவதாக முன்னரே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |