ரஷ்ய எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்கிய உக்ரைன்: வைரல் வீடியோ!
ரஷ்யாவின் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது உக்ரைன் அதிரடி ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
குறிவைக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் கப்பல்
துருக்கியின் கோசேலி மாகாணத்தின் அருகே உள்ள கருங்கடலில் சென்று கொண்டிருந்த ரஷ்யாவின் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது, உக்ரைன் நீரில் செல்லக்கூடிய ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ChuckPfarrer: UPDATE: Ukraine’s SBU has claimed credit for yesterday’s Black Sea attack on the Russian shadow fleet tankers 𝘒𝘢𝘪𝘳𝘰 and 𝘝𝘪𝘳𝘢𝘵. Sea Baby USVs struck the ships as they were inbound to the Ru port of Novorossiysk to load sanctio… pic.twitter.com/jD9NycX9ee
— GMan (Ґленн) ☘️🇬🇧🇺🇦🇺🇸🇵🇱🇮🇱🍊🌻 (@FAB87F) November 29, 2025
கைரோஸ் என்ற பெயர் கொண்ட அந்த டேங்கர் கப்பல் காலி டேங்கர்களுடன் ரஷ்யாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் போது உக்ரைனின் இந்த தாக்குதலானது அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து கப்பலில் இருந்த 25 மாலுமிகளும் உடனடியாக மீட்கப்பட்டனர்.
அடுத்தடுத்து தாக்குதல்
கைரோஸ் கப்பல் மீது தாக்குதல் நடந்த 1 மணி நேரத்திற்குள், அப்பகுதி வழியாக வந்த ரஷ்யாவின் மற்றொரு டேங்கர் கப்பலான விராட் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலுக்கு பிறகு விராட் கப்பலில் இருந்த 20 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதே நேரத்தில் ரஷ்யாவின் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் வெளிப்படையாக பொறுப்பேற்றுள்ளது.
அதில், ரஷ்யா எண்ணெய் வளங்களை விற்று, ரஷ்யா போருக்கு தேவையான நிதியை ரஷ்யா திரட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |