2000 கி.மீ அப்பால் உக்ரைன் காட்டிய அதிரடி: ரஷ்யாவின் நிழல் கடற்படை கப்பல் மீது தாக்குதல்
ரஷ்யாவின் நிழல் கடற்படை கப்பல் மீது உக்ரைன் ட்ரோன்கள் உதவியுடன் தாக்குதல் நடத்தியுள்ளது.
நிழல் கடற்படை கப்பல் மீது தாக்குதல்
மத்திய தரைக்கடல் பகுதியில் ரஷ்யாவின் நிழல் கடற்படை (Shadow Fleet)எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் தங்களுடைய நீண்ட தூர தாக்குதல் திறன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது.
🚨 THIS IS A MAJOR ESCALATION — AND THE MEDIA IS DOWNPLAYING IT
— Dennis jacob (@12431djm) December 19, 2025
For the first time ever, Ukraine just struck a Russian “Shadow Fleet” oil tanker in the MEDITERRANEAN 🌍⚠️
Let that sink in.
🛢️ An Oman-flagged crude tanker (QENDIL)
🛩️ Hit by a Ukrainian heavy bomber UAV (Baba… pic.twitter.com/0UeABL4lUt
ரஷ்யாவின் போர் செலவுகளுக்கு ஆதாரமாக விளங்கும் எண்ணெய் வியாபாரத்தை முடக்கும் வகையில் உக்ரைனின் ஆளில்லா ட்ரோன்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
மேலும் இந்த புதிய நடவடிக்கையின் மூலம் உக்ரைன் தனது தாக்குதலை மத்திய தரைக்கடல் வரை விரிவுபடுத்தி இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
குறிவைக்கப்பட்ட கப்பல்

உக்ரைனின் தாக்குதலில், ஓமன் நாட்டின் கொடியுடன் பயணித்த கெண்டில் என்ற கப்பலே குறி வைக்கப்பட்டது.
இந்த கப்பல் ரஷ்யாவின் கடல்சார் வர்த்தகத்தில் அதிகாரப்பூர்வமற்ற அமைப்புகளின் ஒரு அங்கமாகும்.
உக்ரைன் நிலப்பரப்பில் இருந்து சுமார் 2000 கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த கெண்டில் கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நிழல் கடற்படை என்பது?
உக்ரைன் ரஷ்யா போருக்கு பிறகு மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை தவிர்ப்பதற்காக ரஷ்யா பயன்படுத்தும் அதிகாரப்பூர்வமற்ற கப்பல்களின் தொகுப்பே நிழல் கடற்படை ஆகும்.
இந்த கப்பல்கள் மூலம் ரஷ்யா கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து போருக்கான வருவாயை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |