ரஷ்யாவின் இளைஞர்படை ராணுவத்தில் உக்ரேனியர்கள்! நாசவேலை முயற்சியை முறியடித்ததாக அறிக்கை
ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பு, தங்கள் நாட்டு இளைஞர் ராணுவத்தில் உக்ரேனியர்களை சேர்க்கும் முயற்சியை முறியடித்ததாக கூறியுள்ளது.
இளைஞர் ராணுவம்
2015ஆம் ஆண்டு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் இளைஞர் ராணுவம் அல்லது யுனார்மியாவை நிறுவினார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த அமைப்பை ஆதரிக்கிறது. இந்த அமைப்பை ஆதரவாளர்கள் தேசபக்தி இளைஞர் படை என்று விவரிக்கின்றனர்.
இது குடிமை ஈடுபாட்டை வளர்கிறது மற்றும் இளைஞர்களை இராணுவ சேவைக்கு தயார்படுத்துகிறது.
நாசவேலை நடவடிக்கை
கடந்த மாதம் பாரிய அளவில் குற்றங்களை விசாரிக்கும் ரஷ்யாவின் புலனாய்வுக் குழு, இளம் மற்றும் வயதான ரஷ்யர்கள் இருவரும் வெளிநாட்டினரால் நாசவேலை செய்ய தூண்டப்படும் அபாயத்தை எதிர்கொண்டதாக எச்சரித்தது.
இந்த நிலையில், ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவையானது (FSB) ரஷ்ய இளைஞர் ராணுவ படையில் உறுப்பினர்களை சேர்க்க உக்ரைன் முயற்சித்ததாகவும், நேட்டோ ஆதரவுடன் இதனை செயல்படுத்த முயற்சி நடந்ததாகவும் கூறியுள்ளது.
இதுகுறித்து FSB வெளியிட்ட அறிக்கையில், "உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், இளம் பருவத்தினர் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு எதிரான உளவுத்துறை மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியமான ஆட்சேர்ப்பு மற்றும் ஈடுபாட்டிற்காக அவர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்க முயன்றது" என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |