சீனாவுடன் போருக்குத் தயார்... அமெரிக்கா பதிலடி
அமெரிக்காவுடன் எத்தகைய போருக்கும் தயார் என சீனா கூறியிருந்த நிலையில், சீனாவுடன் போருக்குத் தயார் என அமெரிக்க தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவுடன் எந்த வகையான போருக்கும் தயார்
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரிகளை விதித்த அமெரிக்கா, சீனா மீதான வரி விதிப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
10 சதவிகித வரிகளுக்கு பதிலாக சீனா மீது 20 சதவிகித வரிகளை அமெரிக்கா விதிக்க, கோபமடைந்த சீனா, அமெரிக்கா போரை விரும்புமானால், சீனா எத்தகைய போருக்கும் தயார் என அறிவித்தது.
சீனாவின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்கா போரைத்தான் விரும்புகிறது என்றால், அது வரிகள் தொடர்பிலான போரானாலும் சரி, வர்த்தகப் போரானாலும் சரி அல்லது எந்தப் போரானாலும், இறுதிவரை போராட நாங்கள் தயார் என்று கூறியது.
அமெரிக்கா பதிலடி
இந்நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவுடன் போரிட அமெரிக்காவும் தயாராக உள்ளது என அமெரிக்க பாதுகாப்புச் செயலரான Pete Hegseth கூறியுள்ளார்.
சீனாவின் மிரட்டல் குறித்து கடுமையாக விமர்சித்த Hegseth, நாங்களும் போருக்குத் தயார் என எச்சரித்ததுடன், இப்படி வரி செலுத்துவதை தவிர்ப்பது தொடர்வதால், அமெரிக்கா வலிமையாக இருப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
அமைதிக்காக ஏங்குபவர்கள் போருக்கும் தயாராக இருக்கவேண்டும் என்று கூறிய அவர், ஆகவேதான் நாங்கள் எங்கள் ராணுவத்தை மீண்டும் கட்டி எழுப்பிவருகிறோம் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |