பொதுமக்களை வெளியேற்ற ஒத்துழைப்பு வேண்டும்: புடினிடம் கெஞ்சும் உக்ரைன்
உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் என உக்ரைன் அரசாங்கம் ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் திங்கள்கிழமை அதிகாலைக்குள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ரஷ்யாவிடம் சரணடைய வேண்டும் என ரஷ்ய ஐனாதிபதி புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் இதனை முற்றுலுமாக நிராகரித்த உக்ரைன் ரஷ்யாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பொதுமக்களை கடந்த திங்கள்கிழமை மரியுபோல் நகரத்தை விட்டு வெளியேற்ற முயற்சிக்கையில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல் நான்கு குழந்தைகள் வரை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை முற்றிலுமாக நிராகரித்த ரஷ்யா உக்ரைன் மக்கள் மீது எந்தவொரு தாக்குதலையும் முன்னெடுக்கவில்லை என நிராகரித்துள்ளது.
இந்தநிலையில் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷ்யா ராணுவம் சுற்றி வளைத்து 26வது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில் கிட்டத்தட்ட 1,00,000 முதல் 2,00,000 பொதுமக்கள் வரை உணவு, மின்சாரம், தண்ணீர் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 80 சதவிகிதம் வரை மரியுபோல் நகரம் அழிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 30 சதவிகிதம் மீள்கட்டமைப்பு செய்ய முடியாது நிலைக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக உக்ரைனின் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து ரஷ்யா தாக்குதலில் இருந்து உக்ரைன் மக்களை பாதுகாக்கும் விதமாக கடந்த திங்கள்கிழமை நடந்த தாக்குதலுக்கு பிறகு, தற்போது மீண்டும் 1,114 பொதுமக்ககளை 21 பேருந்துகளில் மரியுபோல் நகரில் இருந்து உக்ரைனின் ஜாபோரிஜியா நகருக்கு மாற்ற உக்ரைன் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதனிடையே இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புதின் தயவு செய்து ஒத்துழைப்பு தரவேண்டும் என உக்ரைனின் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் உயிர் பிழைத்தவர் தற்போது இல்லை: ஹிட்லரால் முடியாததை செய்த காட்டிய புடின்