ரஷ்யாவை எதிர்க்க அயர்ன் டோம் ரொக்கெட் அமைப்பை வாங்கும் உக்ரைன்!
ரஷ்யாவை எதிர்த்துப் போரிட இஸ்ரேலிடம் இருந்து அயர்ன் டோம் ரொக்கெட் இடைமறிப்பு அமைப்பை உக்ரைன் வாங்க உள்ளது என தகவல் வெளியாகியதுள்ளது.
ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராட, உக்ரைன் இஸ்ரேலிடம் இருந்து அயர்ன் டோம் ராக்கெட் இடைமறிப்பு அமைப்பை வாங்க விரும்புகிறது என தெரியவந்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய உக்ரைன் தூதர் Yevgen Korniychuk, உக்ரைன் இஸ்ரேலை அயர்ன் டோம் ராக்கெட் அமைப்பை (Iron Dome rocket interception system) விற்குமாறும், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அயர்ன் டோம் அமைப்பு அதன் மீது ஏவப்பட்ட குறுகிய தூர ராக்கெட்டுகளை இடைமறித்து அழிக்கக்கூடியது. சுமார் ஒரு தசாப்த காலமாக, அமெரிக்கா இஸ்ரேலின் அயர்ன் டோம் அமைப்பிற்கு நிதி ரீதியாக ஆதரவளித்து வருகிறது.
தற்போது, மனிதாபிமான உதவி மூலம் மட்டுமே உக்ரைனுக்கு இஸ்ரேல் ஆதரவு அளித்து வருகிறது. முன்னதாக, உக்ரைனுக்குள் கள மருத்துவமனையை நடத்தி வந்த ஒரே நாடு இஸ்ரேலாகும்.
இதையும் படிங்க: போரிஸ் ஜான்சன் பெயரில் புதிய உணவை தயாரித்த உக்ரைன்!
இஸ்ரேல் அதன் அண்டை நாடான சிரியாவில் இராணுவப் பிரசன்னத்தைக் கொண்டுள்ள ரஷ்யாவை கோபப்படுத்தலாம் என்று கருதுவதால், உக்ரைனுக்கு இராணுவ உதவி செய்வதை தவிர்த்து வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்போது கிடைத்த தகவல் உண்மையில் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதையும் படிங்க: ஜேர்மன் தலைநகரில் சற்றுமுன் நடந்த பயங்கரம்! ஒருவர் மரணம், 30 பேர் காயம்
இதையும் படிங்க: பிரித்தானியாவில் புகைபிடித்தல் சட்டத்தில் மாற்றம்! நாளை வெளியாக வாய்ப்பு