உக்ரைன் இழந்த போர் வாகனங்களை ஈடு செய்ய முடியாது: ஜேர்மனி மறுப்பு
போரில் உக்ரைன் இழந்த ஒவ்வொரு போர் வாகனத்திற்கும் பதிலாக வேறு வாகனங்களைக் கொடுக்கமுடியாது என ஜேர்மனி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் இழந்த போர் வாகனங்களை ஈடு செய்ய முடியாது
இந்த விடயத்தைக் கூறியிருப்பவர் ஜேர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சரான Boris Pistorius. அவர் குறிப்பிட்டுள்ளது Leopard 2 tank என்னும் போர் வாகனங்களை.
அதாவது, ரஷ்யா - உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்கிய Leopard 2 போர் வாகனங்கள் சில அழிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சில போர் வாகனங்களை ரஷ்யா பிடித்துவைத்திருப்பதாக செய்திகளும், அவை தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அது குறித்த உண்மையை உறுதி செய்ய முடியாது என்று கூறியுள்ள Boris, அழிக்கப்பட்ட அந்த போர் வாகனங்கள் ஒவ்வொன்றிற்கும் ஈடாக புதிய போர் வாகனங்களைக் கொடுக்க இயலாது என்று கூறியுள்ளார்.
Photo: CHRISTOF STACHE / AFP
அடுத்து என்ன நடவடிக்கை?
ஆனாலும், பழுதுபார்க்கப்பட்ட Leopard 1A5 வகை போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 100க்கும் அதிகமான Leopard 1A5 வகை போர் வாகனங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார் Boris.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |