உக்ரைனால் போரில் வெற்றி பெற முடியாது... உறுதியாக நம்பும் டொனால்ட் ட்ரம்ப்
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனால் வெல்ல முடியும் என்று தான் நம்பவில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கைப்பற்ற முடியும்
வெள்ளை மாளிகையில், ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி சந்திப்பு மீண்டும் வாக்குவாதத்தில் முடிந்த நிலையிலேயே, ட்ரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
ரஷ்ய வீரர்கள் கடுமையாக போரிட்டு கைப்பற்றியுள்ள உக்ரைன் பகுதிகளை ஜெலென்ஸ்கி விட்டுத்தர முன்வர வேண்டும் என்றே ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் மன்ற கூடுகையின் போது,
ரஷ்யாவிடம் இழந்த அதன் அனைத்துப் பகுதிகளையும் உக்ரைனால் மீண்டும் கைப்பற்ற முடியும் என்று கூறினார். ஆனால் தற்போது, ஜெலென்ஸ்கி கோரியுள்ள ஆயுதங்களையும் வழங்க மறுத்துள்ளார். அது போரை மேலும் உக்கிரப்படுத்தும் என விளக்கமளித்துள்ளதுடன், அமெரிக்காவிற்கு அந்த ஆயுதங்கள் தேவைப்படும் என்றும் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஒரு பத்திரிகையாளரின் உக்ரைன் போர் குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், உக்ரைனால் போரில் வெற்றி பெற முடியும் என தாம் நினைக்கவில்லை என்றார்.
அத்துடன், அவங்களால இன்னும் ஜெயிக்க முடியும், நான் வெல்வேன்னு சொல்லவே இல்ல என்று குழப்பமான பதிலளித்துள்ளார். மட்டுமின்றி, ஒவ்வொருமுறை சந்திப்பின் போதும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விளாடிமிர் புடினின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு ஜெலென்ஸ்கியை கட்டாயப்படுத்தியும் வருகிறார்.
ரஷ்ய ஆதரவு நிலை
அத்துடன், உக்ரைன் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ரஷ்யத் தலைவர் உக்ரைனை மொத்தமாக அழித்துவிடுவார் என்றும் ஜெலென்ஸ்கியை ட்ரம்ப் மிரட்டியுள்ளார். ஆனால், வெள்ளை மாளிகை சந்திப்பு தங்களுக்கு சாதகமாகவே முடிந்தது என்று ஜெலென்ஸ்கி பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ட்ரம்புடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக 25 பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை உக்ரைன் தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தொடர்ந்து ரஷ்ய ஆதரவு நிலையை உறுதி செய்து வருவதை அடுத்து, உக்ரைன் சமாதான ஒப்பந்தம் தொடர்பில் விவாதிக்க லண்டனில் சந்திப்பு ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பிர்ரித்தானியா பிரதமர் ஸ்டார்மர், ஜேர்மனியின் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் உட்பட முக்கியமான நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |