மே 8 ஆம் திகதி வரை உலகம் காத்திருக்க விரும்பவில்லை... ஜெலென்ஸ்கி பதிலடி
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரில் விளாடிமிர் புடின் அறிவித்த போர்நிறுத்தம் சில நாட்களுக்கு மட்டுமே அமுலில் இருக்கும் நிலையில், மே 8 வரை உலகம் காத்திருக்க விரும்பவில்லை என்று ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
காத்திருக்க வேண்டும்
உக்ரைன் மக்களுக்காக வெளியிடும் காணொளி ஒன்றில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இதை குறிப்பிட்டுள்ளார். ஏதோ ஒரு காரணத்திற்காக, அனைவரும் மே 8 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும், அதன் பிறகுதான் அணிவகுப்பின் போது அமைதியை உறுதி செய்ய புடினுக்கு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அணிவகுப்பல்ல, மக்களின் உயிர் மீது நாங்கள் மதிப்பளிக்கிறோம் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, மே 8 ஆம் திகதிக்காக காத்திருக்க எந்த காரணமும் இல்லை என்று உலகம் நம்புகிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் அந்த போர்நிறுத்தத்திற்கு பின்னர், மீண்டும் படுகொலைகள் தொடரும் என்பது உறுதி. எந்த நிபந்தனையும் இல்லாத குறைந்தது 30 நாட்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை ஜெலென்ஸ்கி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
ட்ரோன் தாக்குதலுக்கு பயந்து
ஆனால், புடின் தரப்பில் இருந்து இதுவரை பதிலேதும் வெளியாகவில்லை. தற்போது எந்த அச்சுறுத்தலும் இன்றி வெற்றிவிழா கொண்டாட்டத்திற்காக, போர் நிறித்தம் தேவை என விளாடிமிர் புடின் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த 3 ஆண்டுகளாக உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பயந்து, அணிவகுப்புகளும் கொண்டாட்டங்களும் பாதியாக குறைக்கப்பட்டு, ஒரு சடங்காக மட்டுமே மாறியுள்ளது.
அந்த நிலை இந்த ஆண்டும் தொடர வேண்டாம் என்றே புடின் 72 மணி நேர போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார். ஆனால் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகமும் புடினின் அறிவிப்பை விமர்சித்துள்ளதுடன், முழுமையான போர் நிறுத்தம் தேவை என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |