ஐரோப்பிய நாடுகளின் இரண்டாம் தர பார்வை...உக்ரைனை காயப்படுத்துகிறது: டிமிட்ரோ குலேபா கவலை
உக்ரைன் மீது சில ஐரோப்பிய நாடுகள் இரண்டாம் தர பார்வையை முன்வைப்பது உக்ரைனிய மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது என உக்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்ய போரானது 85வது நாளாக நடைபெறும் நிலையில், விரைவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் உக்ரைனின் முயற்சிகள் தற்போது நிதானமடைய தொடங்கியுள்ளன.
இந்தநிலையில், வியாழன் கிழமையான இன்று உக்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், உக்ரைன் மீது இரண்டாம் தர பார்வையை சில ஐரோப்பிய நாடுகள் முன்வைப்பது உக்ரைனிய மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.
Strategic ambiguity on Ukraine’s European perspective practiced by some EU capitals in the past years has failed and must end. It only emboldened Putin. We do not need surrogates for EU candidate status that show second-class treatment of Ukraine and hurt feelings of Ukrainians.
— Dmytro Kuleba (@DmytroKuleba) May 19, 2022
மேலும் சில ஐரோப்பிய நாடுகளின் மூலோபாய தெளிவின்மை காரணமாக உக்ரைனிய ஐரோப்பிய முன்னோக்கு தோல்வியடைந்துள்ளது. இதனால் சர்வாதிகார புடின் தைரியமடைந்துள்ளார் என்பதால் இவை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
டிமிட்ரோ குலேபாவின் இந்த கருத்து, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் விருப்பத்திற்கு குறுக்குவழிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என முன்னதாக ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்த கருத்தை தொடர்ந்து வெளிவந்துள்ளது.
அத்துடன் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்த கருத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவாக இணையும் உக்ரைனின் விருப்பம் நிறைவேற்றபட்டால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய காத்து இருக்கும் மேற்கு பால்கன் நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் அநியாயம் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: எல்லையை கடக்க முயன்ற...ரஷ்ய அதிகாரி சிறைப்பிடித்த அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை
ஐரோப்பிய நாடுகளில் இணைய விரும்பும் உக்ரைனுக்கு மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம் என்றாலும் அதற்கான விரைவான வழியையும் நாம் கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.