ரஷ்யாவின் பலம்வாய்ந்த கருங்கடல் கடற்படையை ஆட்டம் காண வைத்த உக்ரைன்: புடின் எடுத்த முடிவு
உக்ரைன் படைகள் கருங்கடல் கடற்படையை மொத்தமாக ஆட்டம் காணவைத்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கடற்படைத் தளபதியை பதவி நீக்கம் செய்துள்ளார்.
சேதத்தை ஏற்படுத்தியது உக்ரைன்
ரஷ்யாவின் பலம்பொருந்திய கருங்கடல் கடற்படை மீது ட்ரோன் மற்றும் ஏவுகணையால் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது உக்ரைன். இந்த ஆத்திரத்தில் கடற்படைத் தளபதி Nikolai Yevmenov-வின் பதவியைப் பறித்துள்ளார் புடின்.
கடந்த சில மாதங்களாகவே ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை மீது குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தி வந்தது உக்ரைன். இந்த நிலையிலேயே புதிய கடற்படை தளபதியாக Admiral Alexander Moiseev நியமிக்கப்பட்டுள்ளார்.
Nikolai Yevmenov-வின் பதவி பறிபோன தகவல் வெளியானாலும், காரணம் என்ன என்பது தொடர்பில் தகவலேதும் வெளியாகவில்லை. Alexander Moiseev தற்போது வடக்கு கடற்படையின் தளபதியாக பணியாற்றுகிறார்,
நெருக்கடியே காரணம்
ஆனால் கடற்படையில் புதிய தளபதியாக அவர் பொறுப்புக்கு வருவார் எவரும் எதிர்ப்பார்க்காத நிலையில் தற்போது ஜனாதிபதி புடினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 மே மாதத்தில் இருந்தே Nikolai Yevmenov கடற்படை தளபதியாக பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்த திடீர் மாற்றத்திற்கு உக்ரைன் அளித்துள்ள நெருக்கடியே காரணம் என கூறப்படுகிறது. பிப்ரவரி மத்தியில் ரஷ்யாவின் போர் கப்பல்கள் தரையிறங்கும் கப்பலானது உக்ரைன் படைகளால் மூழ்கடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |