ரஷ்ய போர்க்கப்பலை ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்த உக்ரைன்
கருங்கடலில் ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றை உக்ரைன் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரஷ்ய கடற்படையின் கருங்கடல் படையின் அட்மிரல் Grigorovich-ரக போர்க்கப்பல் கருங்கடலில் உள்ள ஸ்மினி தீவு அருகே தீப்பிடித்து எரிவதாக கூறப்படுகிறது.
மீட்பு பணி நடந்து வருவதாகவும், பல விமானங்கள், மீட்பு கப்பல்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், தற்போது வரை இரு தரப்பிலிருந்தும் உறுதிப்படுத்தும் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
ரஷ்ய போர்க்கப்பலை மூழ்கடிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியது அம்பலம்!
சில நாட்களுக்கு முன் கருங்கடலில் ரஷ்யாவின் மாஸ்க்வா போர்க்கப்பலை ஏவுகணை மூலம் தாக்கிய அழித்ததாக உக்ரைன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.