ரஷ்ய போர்க்கப்பலை மூழ்கடிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியது அம்பலம்!
கருங்கடலில் ரஷ்யாவின் போர்க்கப்பல் மாஸ்க்வாவை தாக்கி மூழ்கடிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியதாக அமெரிக்க ஊடகங்கள் பல தெரிவித்துள்ளன.
பெயர் வெளிப்படுத்த விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது, ஒடேசா தெற்கில் பயணிக்கும் கப்பலின் விவரம் குறித்து அமெரிக்காவிடம் உக்ரைன் தகவல் கேட்டது.
அந்த கப்பல் மாஸ்க்வா என்று தெரிவித்த அமெரிக்கா, அதன் இருப்பிடத்தை உறுதிசெய்ய உக்ரைனுக்கு உதவியது.
இதனையடுத்து, இரண்டு ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மாஸ்க்வாவை தாக்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரியுபோல் எஃகு ஆலை மீது மீண்டும் சரமாரி தாக்குதல்! வீடியோ ஆதாரம்
இதனிடையே, உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள உதவ அமெரிக்கா உளவுத்துறையை வழங்கியது என பென்டகன் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
அதேசமயம், அமெரிக்கா அளித்த இருப்பிட தகவலை வைத்து ரஷ்ய ராணுவ ஜெனரல்களை உக்ரைன் கொன்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி மறுத்துள்ளார்.
மேலும், மாஸ்க்வாவை தாக்கி உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்ததாக உலா வரும் செய்திகளையும் அமெரிக்கா மறுத்துள்ளது.