4 ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்களை குறிவைத்து அழித்த உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்
உக்ரைனின் துல்லிய தாக்குதலில் ரஷ்ய ஹெலிகாப்டர்கள் சுக்குநூறாக சிதைந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் துல்லிய தாக்குதல்
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய துல்லியமான தாக்குதலில் நான்கு ரஷ்ய ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள இந்த முக்கிய தளவாட மையத்தில் நடந்த இந்த தாக்குதல், ரஷ்யாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
In Russia’s Belgorod region, deep behind enemy lines, four Russian helicopters were destroyed — two Ka-52s and two Mi-8s. pic.twitter.com/F9WxkzVL6e
— NEXTA (@nexta_tv) March 24, 2025
"X" சமூக ஊடகத்தில் பரவி வரும் வீடியோவில், வெப்ப அல்லது அகச்சிவப்பு காமிரா மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் தெளிவாக உள்ளன.
இதில் ரஷ்ய தேசியக் கொடியுடன் கூடிய இரண்டு ரஷ்ய ஹெலிகாப்டர்கள் தாக்குதலுக்கு இலக்கானது தெரியவந்துள்ளது.
வெடித்து சிதறிய ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்கள்
HIMARS ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், சுமார் $16 மில்லியன் மதிப்புள்ள இரண்டு Ka-52 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு Mi-8 போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 2024 முதல், உக்ரைன் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊடுருவியதைத் தொடர்ந்து, பெல்கோரோட் பிராந்தியத்தில் தனது தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |