ரஷ்யாவுக்கு அடுத்த இடியை இறக்கிய உக்ரைன்: பொதுமக்களை வேகமாக வெளியேற்றும் புடின்
ரஷ்யாவின் Kursk பிராந்தியத்தில் நுழைந்து முன்னேறிவரும் உக்ரைன் படைகள், மிக முக்கியமான பாலம் ஒன்றை மொத்தமாக சேதப்படுத்தி, ஜனாதிபதி புடினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.
HIMARS ஏவுகணை
Kursk பிராந்தியத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான பாலம் ஒன்றை ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் படைகள் தகர்த்துள்ளது. பாலம் இரண்டாக உடைந்துள்ளது என்றே கூறப்படுகிறது.
தொடர்புடைய பாலத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முன்பு தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது அமெரிக்கா அளித்துள்ள HIMARS ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் தரப்பு ரஷ்யாவுக்கு நெருக்கடி அளித்துள்ளனர்.
இந்த நிலையில், Kursk பிராந்திய ஆளுநர் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இது ரஷ்யாவுக்கு பின்னடைவு என்பதையும் பதிவு செய்துள்ளார்.
Seym நதி மீது அமைந்துள்ள அந்த பாலமானது, உக்ரைன் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பகுதிகளை இணைத்து வந்துள்ளது. முன்னர் போருக்கான ஆயுதங்களை கொண்டுசெல்லவும் துருப்புகளை அனுப்பவும் ரஷ்ய ராணுவம் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்துள்ளது.
மக்களை வெளியேற்றும் நடவடிக்கை
உக்ரைன் எல்லையின் வடக்கே 6.8 மைல்கள் தொலைவில் இந்த பாலம் அமைந்துள்ளது. தற்போது Glushkovsky பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ரஷ்யா துரிதப்படுத்தியுள்ளது.
வெளியான தகவல்களின் அடிப்படையில், சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள வேறு சில பாலங்களும் உக்ரைன் படைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |