சீறிச்சென்ற ரஷ்யா டாங்கிகளை தாக்கி சிதறடித்த உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்
ரஷ்யா டாங்கிகளை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த காணொளி காட்சி வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, கடந்த சில தினங்களாக போரில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கார்வ் நகரை உக்ரைன் படைகள் மீட்டுள்ளனர். மேலும், சுமி நகரில் எல்லை தாண்டி ஊடுருவ ரஷ்ய படைகள் மேற்கொண்ட முயற்சியை உக்ரைன் படைகள் முறியடித்துள்ளன.
மே 17ம் திகதி நிலவரப்படி உக்ரைனுடனான போரில் ரஷ்யா 27,900 வீரர்களை இழந்துள்ளது. அதுமட்டுமின்றி, 1234 டாங்கிகள், 3009 ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள், 201 பேர் விமானங்கள், 167 ஹெலிகாப்டர்கள் மற்றும் 13 போர்க்கப்பல்கள் மற்றும் படகுகளை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைனின் ஆயுதப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
Destruction of #Russian military equipment by #Ukrainian forces. pic.twitter.com/9xoINiD3BS
— NEXTA (@nexta_tv) May 17, 2022
இந்நிலையில், உக்ரைனில் சீறிச்சென்ற ரஷ்யா டாங்கிகளை உக்ரைன் படைகள் தாக்கி அழித்துள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்தில் பதிவுசெய்த ரகசிய வாக்கை வெளியிட்ட சஜித்! வைரலாகும் புகைப்படம்
இதுதொடர்பாக வெளியாக வீடியொவில், சீறிச்சென்ற ரஷ்யா டாங்கியை குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்குகின்றன.
இந்த தாக்குதலில் ரஷ்யா டாங்கி பயங்கரமாக வெடித்து சிதறுகிறது. அதன் அருகில் இருந்த மற்றொரு டாங்கியும் வெடித்து சிதறுகிறது. இச்சம்பவம் உக்ரைனில் எங்கே எப்போது நடந்தது என்ற விவரம் ஏதும் தெரியவில்லை.