பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் விடுதி மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 12 பேர் வரை உயிரிழப்பு
ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகம் மீது தாக்குதல்
போரின் ஆரம்ப கட்டத்தில் ரஷ்ய படைகளால் உக்ரைனிய பகுதியான லுகான்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்கள் விடுதிகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதலில் தாக்குதலில் குறைந்தது 10 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
ரஷ்யாவின் அரசு செய்தி ஊடகமான RIA வெளியிட்ட தகவலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் 38 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் 9 இளம் மாணவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவலையை அதிகரிக்க செய்துள்ளது.
ட்ரோன் தாக்குதலால் சேதமடைந்த பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |