தீப்பற்றி எரிந்த ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கு: உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் என அறிவித்த ஆளுநர்
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், தெற்கு ரஷ்யாவில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் தெற்கு கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நோவோமின்ஸ்காயா கிராமத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் அங்குள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து 55 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தனித்தனியாக இரண்டு உக்ரைன் ட்ரோன்கள் குர்ஸ்க் பகுதியைத் தாக்கியதாகவும், மேலும் 2 உக்ரைனின் எல்லையில் உள்ள பெல்கோரோட் பகுதியை குறி வைத்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து கிராஸ்னோடர் பிராந்திய ஆளுநர் Veniamin Kondratyev கூறும்போது, தாக்குதலினால் ஒரு எண்ணெய் தேக்கத்தில் விழுந்த ட்ரோனின் குப்பைகள் விழுந்ததாகவும், ஆரம்ப தகவல்களின்படி யாரும் காயமடையவில்லை என்றார்.
மேலும் கிடங்கில் பெட்ரோலிய பொருட்களின் சிறிய எச்சங்கள் மட்டுமே உள்ளன என்று குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |