337 ட்ரோன்கள் மூலம் மாஸ்கோ மீது உக்ரைன் தாக்குதல்: அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையூறு?
மாஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் சமீபத்தில் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சவுதி அரேபியாவில் உக்ரைன்-அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், இந்த தாக்குதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
💥🔥💥 While we were sleeping, a record number of drones were launched at Moscow
— NEXTA (@nexta_tv) March 11, 2025
Their debris fell en masse across the Moscow region—there are wounded and one fatality. Other regions were also extremely tense — Russia’s Ministry of Defense reported that over 300 UAVs were shot… pic.twitter.com/kDfpYQFoMp
தாக்குதலின் விவரங்கள்
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மாஸ்கோ மீது கிட்டத்தட்ட 337 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பெரும்பாலும் குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய படையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளன.
மாஸ்கோ பிராந்தியத்தில் மட்டும் 91 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
பாதிப்புகள்
இந்த தாக்குதலில் 7 அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
6 விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டதுடன், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
மாஸ்கோ மேயர் கூற்றுப்படி 70 விமானங்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையின் பின்னணி
சவுதி அரேபியாவில் உக்ரைன்-அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.
ஜெலென்ஸ்கி சவுதி இளவரசரை சந்தித்த பிறகு, அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழுவை விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பேச்சுவார்த்தை மோதலுக்கான தீர்வு காணும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |