புடினுடைய ரகசிய மாளிகை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் ட்ரோன்: ரஷ்யாவில் பரபரப்பு
உக்ரைன் தாக்குதல், ரஷ்ய ஜனாதிபதி புடினை நெருங்கிவிட்டதோ என எண்ணத்தூண்டும் வகையில் ஒரு ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நிகழ்த்தியுள்ளது.
புடினை நெருங்கும் உக்ரைன்
2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, ரஷ்யா உக்ரைனை ஊடுருவியது. இன்றுடன் உக்ரைன் போர் துவங்கி 559 நாட்கள் ஆகின்றன.
Credit: east2west news
உக்ரைனை சில நாட்களுக்குள் கைப்பற்றிவிடலாம் என தப்புக்கணக்கு போட்டுவிட்டது ரஷ்யா. இத்தனை நாட்களாக அவ்வளவு பெரிய ஜாம்பவானான ரஷ்யாவை சமாளித்துவரும் உக்ரைன், ரஷ்யாவுக்குள்ளும் தாக்குதல் நடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
Credit: east2west news
மே மாதம் 3ஆம் திகதி, மாஸ்கோவுக்குள்ளேயே ட்ரோன் தாக்குதல் நடத்தியது உக்ரைன். தற்போது, உக்ரைன் போர் புடினை நெருங்கிவிட்டதோ என எண்ணும் வகையில், புடினுடைய ரகசிய மாளிகை ஒன்றின் அருகே வரை வந்துவிட்டது உக்ரைன் ட்ரோன் ஒன்று.
புடினுடைய ரகசிய மாளிகை
ரஷ்ய ஜனாதிபதிகள் வேட்டைக்குச் சென்று, பின் விருந்தினர்களுக்கு விருந்துவைக்கும் ரகசிய மாளிகை ஒன்று Zavidovo என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ரஷ்ய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.
Credit: east2west news
இந்நிலையில், அந்த ரகசிய மாளிகை அருகிலேயே உக்ரைனுக்குச் சொந்தமான kamikaze ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் ஒன்று வைக்கப்பட்டிருந்த கிடங்கின்மீது அந்த ட்ரோன் வீழ்ந்து வெடித்துச் சிதறியுள்ளது.
Credit: east2west news
இதே இடத்தில்தான் வாக்னர் கூலிப்படைத் தலைவரான Prigozhinஉடைய விமானமும் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: east2west news
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |