உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யா எண்ணெய் ஆலையில் தீ விபத்து
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் மேலும் தீவிரமாகி வருகிறது.
புதன்கிழமையன்று, ரஷ்யாவின் பெர்ம் நகரம் அருகே உள்ள எண்ணெய் பம்பிங் நிலையம் உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் தீப்பற்றிதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இடம் உக்ரைனிலிருந்து 1,500 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) இந்த தாக்குதல் ரஷ்யாவின் எரிசக்தி வளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் பலவும் எரிந்ததாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் பெர்ம் மாநில ஆளுநர், ஒரு தொழிற்சாலை மீது ட்ரோன் தாக்கல் நடந்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம், ரஷ்ய அதிகாரிகள் உக்ரைன் நீண்ட தூர தாக்குதல்களைப் பற்றி முழுமையான தகவல்களை வெளியிடவில்லை.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைத்து, போரை நடத்தும் திறனை தடுக்க உதவும் என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் கரும்புகை எழும் காட்சி இடம்பெற்றிருந்தது.

இதற்கிடையில் ரஷ்யா தனது ட்ரோன் தாக்குதல்களை உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கிழக்கு உக்ரைனின் சுமி மற்றும் கார்கிவ் பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன. பலர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளும் ட்ரோன் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தி வரும் நிலையில், இந்த தாக்குதல்கள், போர் புதிய கட்டத்தை எட்டியிருப்பதை காட்டுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |