தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் நடத்திய பாரிய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவில் ஒருவர் கொல்லப்பட்டார்.
தீ விபத்து
தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் விமானத் தாக்குதலை நடத்தியது.

அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் கிராஸ்னோடார் பிராந்திய ஆளுநர் வெனியாமின் கொன்ட்ராட்யேவ் தெரிவித்தார்.
மேலும், ஒரு சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்றும், கீழே விழுந்த பாகங்களால் பல வீடுகள் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிவாயுக் குழாய் சேதமடைந்தன
இதுதொடர்பான அவரது பதிவில், "கிராஸ்னோடார் பிராந்தியம் எதிரியின் மிகப்பெரிய ட்ரோன் விமானத் தாக்குதலுக்கு உள்ளானது. வருந்தத்தக்க வகையில் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஒருவர் காயமடைந்து, சம்பவ இடத்திலேயே அவருக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்பட்டன. நகரத்தில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது; மேலும் ஒரு மின்சாரக் கம்பி மற்றும் எரிவாயுக் குழாய் சேதமடைந்தன" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |