ரஷ்ய படைகளை கண்காணிக்க ஆப்பிள் சாதனத்தை பயன்படுத்திய உக்ரைனியர்!
திருடப்பட்ட ஆப்பிள் ஏர்போட்களில் 'ஃபைண்ட் மை' அம்சத்தைப் பயன்படுத்தி ரஷ்ய துருப்புக்களை உக்ரைனியர் ஒருவர் கண்காணித்த சம்பவம் தெரியவந்துள்ளது.
நடந்துகொண்டிருக்கும் போருக்கு மத்தியில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தனது திருடப்பட்ட ஏர்போட்களைக் கண்டறிய ஆப்பிள் சாதன கண்காணிப்பு அம்சத்தைப் பயன்படுத்தியுள்ளார். அதேசமயம் ரஷ்ய துருப்புக்கள் இருக்கும் இடத்தையும் கண்காணிதுள்ளார்.
ஏர்பட்ஸ் மூலம் ரஷ்ய துருப்புகள் சென்ற இடத்தை கண்டறிந்த செமனெட்ஸ்
டைம்ஸ் ஆஃப் லண்டனின் படி , விட்டலி செமனெட்ஸ் (Vitaliy Semenets) எனும் அந்த நபர், ரஷ்யாவின் படையெடுப்பின் தொடக்கத்தில் Hostomel-ல் உள்ள அவரது வீட்டில் இருந்து தனது புளூடூத் இயர்பட்ஸ் திருடப்பட்டதாகக் கூறினார்.
அதைத் தொடர்ந்து அவர் ஆப்பிள் தயாரிப்புகளில் உள்ள "Find My" அம்சத்தைப் பயன்படுத்தி திருடப்பட்ட இயர்பட்ஸ் எங்கே எடுத்துச்செல்லப்படுகிறது என்று பின்பற்றும் அதே சமயத்தில் ரஷ்ய துருப்புக்களின் பாதையையும் கண்டறியவும் அதனை பயன்படுத்தினார்.
செமனெட்ஸ் தனது திருடப்பட்ட ஏர்பட்ஸ் பெலாரஸ் எல்லையைத் தாண்டியபோது அவற்றைக் கண்காணித்தார், பின்னர் அவர்கள் ரஷ்ய நகரமான பெல்கோரோட்டை (Belgorod) அடைந்தது. அங்கிருந்து உக்ரைனிய நகரமான டான்பாஸ் (Donbas) மீதான தாக்குதலுக்கு அவர்கள் தயாரானது கன்டுபிடிக்கப்பட்டது.
"தொழில்நுட்பத்திற்கு நன்றி, எனது ஏர்பட்ஸ் இப்போது எங்கே என்று எனக்குத் தெரியும்" என்ற தலைப்புடன் உக்ரேனிய நபர் தனது தந்திரத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் செமனெட்ஸ்.
இதுவே எங்களின் கடைசி செய்தியாக இருக்கலாம்... காப்பாற்றுங்கள்! உக்ரைன் தளபதியின் உருக்கமான வீடியோ
உக்ரைனில் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்கும் ரஷ்ய வீரர்கள்
இதற்கிடையில், டைம்ஸ் ஆஃப் லண்டனின் கூற்றுப்படி , ரஷ்ய துருப்புக்கள் உக்ரேனிய வீடுகளில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்ததாக பல தகவல்கள் வந்துள்ளன, அதில் வல்லுநர்கள் ரஷ்ய படைகளின் ஒழுங்கின்மை மற்றும் ஒழுக்கமின்மையின் அடையாளம் என்று கூறியுள்ளனர்.
பல சிசிடிவி காட்சிகள், பெலாரஸில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் ரஷ்ய துருப்புக்கள் சலவை இயந்திரங்கள், மடிக்கணினிகள் மற்றும் இ-ஸ்கூட்டர்களை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவதற்காக எடுத்துச்செல்வதை காட்டுகின்றன. மொத்தத்தில், சுமார் இரண்டு டன் பொருட்கள் 16 ரஷ்ய துருப்புக்களால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், உக்ரைனின் பாதுகாப்பு சேவைகள் வெளியிட்ட இடைமறித்த அழைப்பின்படி, ஒரு ரஷ்ய சிப்பாய் தனது உறவினரிடமிருந்து பெற்ற ஷாப்பிங் பட்டியலில், ஒரு மடிக்கணினி, ஸ்னீக்கர் காலணிகள் மற்றும் ஆடைகள் என இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், ஒரு ரஷ்ய சிப்பாய் தனது கெவ்லர் உடல் கவசத்திற்கு பதிலாகஉக்ரைனில் இருந்து திருடப்பட்ட மேக்புக் லேப்டாப் கணினியை மாட்டிக்கொண்டிருந்த நிலையில் இர்பினில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"வெட்கமே இல்லாதவர்" பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கிடைத்த அவப்பெயர்