ரஷ்யாவின் இரண்டு ஆயுதக்கிடங்குகளை முற்றிலுமாக அழித்த உக்ரைன் வீரர்கள்... புடினுக்கு மற்றொரு பெரிய அடி
ரஷ்யாவின் இரண்டு ஆயுதக்கிடங்குகளை உக்ரைன் வீரர்கள் முற்றிலுமாக அழித்த விடயம் புடினுக்கு மற்றொரு பெரிய அடியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனில், Ilovaisk மற்றும் Brylivka ஆகிய இரண்டு இடங்களில் ரஷ்யா அமைத்திருந்த ஆயுதக்கிடங்குகளை நேற்று காலை உக்ரைன் வீரர்கள் தாக்கி முற்றிலும் அழித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்ததாக பிரித்தானியாவின் தி எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில், பின்னணியில் வெடிச்சத்தத்துடன், கொளுந்துவிட்டெரியும் தீயையும் கரும்புகையையும் காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
?️Ukrainian forces targeted a Russian ammunition depot near a railway station in occupied Illovaisk, #Donetsk Oblast (~40km behind the frontline). #UkraineRussiaWar pic.twitter.com/MeJ9u8jJJK
— MilitaryLand.net (@Militarylandnet) July 29, 2022
Image: GETTY / @MILITARYLANDLET / TWITTER
Image: GETTY