தலைமுடியை வெட்டி தங்கள் அழகை குறைத்து காட்டும் உக்ரைன் பெண்கள்! அதிரவைக்கும் காரணம்
ரஷ்ய துருப்புகளால் சீரழிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி கொண்டு அழகை குறைத்து காட்டி கொள்ள முயல்கின்றனர்.
கீவில் உள்ள Ivankivன் துணை மேயர் Maryna Beschastna தான் இந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், சமீபத்தில் கூட 15 மற்றும் 16 வயதுடைய சிறுமிகளை ரஷ்ய வீரர்கள் கிராமத்தில் வைத்து சீரழித்தனர். தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து வரப்பட்ட அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: உக்ரைனில் 14 வயது சிறுமி கர்ப்பம்! 5 ரஷ்ய வீரர்களை அம்பலப்படுத்திய பெண் எம்.பி
இதையடுத்து பல பெண்கள் தங்கள் அழகை குறைத்து காட்ட தலைமுடியை அதிகளவில் வெட்டி கொள்ள ஆரம்பித்தனர்.
இப்படி செய்வதால் ரஷ்ய துருப்புகள் பார்வை அவர்கள் மீது விழாது என்பது தான் காரணம்.
உக்ரைனில் உள்ள பல பகுதிகளில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் துணை மேயர் இந்த தகவலை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.