ரஷ்ய ட்ரோன் விவகாரம்... பெலாரஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த உக்ரைன்
உக்ரைன் மீதான ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை, தனது நாட்டிலிருந்து அகற்றுவதற்கு பெலாரஸ் ஜனாதிபதிக்குஉக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒரு வார கால அவகாசம் அளித்துள்ளார்.
உக்ரேனியத் தலைவர் மிரட்டல்
தனது எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் உக்ரேனியத் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்து வரும் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ,
பெலாரஸால் உக்ரைனுக்கு ஆபத்தில்லை என்றும் அஞ்சத் தேவையில்லை என்றும், தனது நாடு போரில் ஈடுபடும் என்ற எந்தக் கருத்தையும் நிராகரிப்பதாகவும் சமீபத்தில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று பதிலளித்துள்ள ஜெலென்ஸ்கி, உக்ரைனை ஒட்டியுள்ள பெலாரஸின் இரண்டு பிராந்தியங்களில் சமிக்ஞை அஞ்சல் நிலையங்கள் அமைந்துள்ளன என்றும், உக்ரைனிய பொதுமக்கள் மீதான தாக்குதல்களின் போது ட்ரோன்கள் வழிசெலுத்த ரஷ்யப் படைகள் அவற்றை பயன்படுத்துகின்றன என்றும் கூறினார்.
நாம் அதைச் செய்வோம்
மேலும், பெலாரஸ் போரில் ஈடுபடவில்லை எனக் கூறுவது உறுதி என்றால், அவர் இந்தக் கருவியை அகற்றட்டும், அதை அணைத்துவிடட்டும் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதைச் செய்வதற்கு அவருக்கு ஒரு வாரம் போதுமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர் அதைச் செய்யாவிட்டால், நாம் அதைச் செய்வோம் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய கூட்டாளியான லுகாஷென்கோ, 2022-ல் ரஷ்யப் படைகள் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியபோது, தாக்குதல்களை நடத்துவதற்கு பெலாரஸ் நாட்டின் எல்லையைப் பயன்படுத்த அவர் அனுமதித்தார். பெலாரஸ் எல்லை வழியாகவே ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |