உக்ரைன் தானிய ஒப்பந்தத்திற்கு திரும்ப தயார்... மீண்டும் நிபந்தனை விதித்த ரஷ்யா
மேற்கத்திய நாடுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றினால் உக்ரைன் தானிய ஒப்பந்தத்தை ஏற்க தயார் என ரஷ்யா மீண்டும் அறிவித்துள்ளது.
கோரிக்கைகள் அனைத்தும்
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வியாழன் அன்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் இதை தெரிவித்துள்ளார்.
@reuters
கருங்கடல் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த ஐ.நா பொதுச்செயலாளருக்கு பதிலளித்த செர்ஜி லாவ்ரோவ் ரஷ்யாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யா முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுமானால் மட்டுமே இனி தானிய ஒப்பந்தத்தில் இணைய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கருங்கடல் தானிய ஒப்பந்தமானது ஜூலை 2022 ல் துருக்கி, ஐ.நா மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் உக்ரைன் தானிய ஏற்றுமதியை உறுதிப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
ரஷ்யா விலகியது
உலக நாடுகளின் தேவையை கருத்தில் கொண்டு, ஏற்றுமதி செய்யப்படும் அளவை கருத்தில் கொண்டு, சாலை மார்க்கம் அல்லது ரயில் சேவையை பயன்படுத்தி முன்னெடுக்க முடியாது என கூறப்பட்டது.
@getty
இதனையடுத்து, அந்த ஆண்டு ஜூலை வரையில் உக்ரைன் துறைமுகங்களில் 33 மில்லியன் டன் தானியம் தேங்கியிருப்பதாக கூறப்பட்டது. இதில் 61% தானியங்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கானது என பிரித்தானியா தெரிவித்தது.
ஒப்பந்தம் அமுலுக்கும் வந்ததும் உலக சந்தையில் தானிய விலை டன்னுக்கு 800 டொலர் என சரிவடைந்தது. ஆனால் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டு, சமீபத்தில் அந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |