உக்ரைன் தானியத்தில் மிகப்பெரிய பங்கை வாங்கும் அமெரிக்கா: சொன்ன நெகிழ்ச்சி காரணம்
ஒருசில வாரங்களில் பஞ்சம் பற்றிய அறிவிப்பை வெளியிடக் கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது
உலக உணவு திட்டத்திற்கான தானியங்களில் பாதி அளவு உக்ரேனில் இருந்தே கடந்த ஆண்டு வாங்கப்பட்டுள்ளது
உக்ரைனிடம் இருந்து சுமார் 150,000 மெட்ரிக் டன் தானியங்களை வாங்க அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தானியங்களுடன் கப்பல் இறுதியாக வந்து சேரும் இடங்கள் உறுதி செய்யப்படவில்லை எனவும் விவாதங்கள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் மன்றத்தால் முன்னெடுக்கப்படும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒருபகுதியாக ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள தானிய கப்பல் ஒன்று புறப்பட்டு விட்டதாகவும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு தானியங்களை வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளை பொறுத்தமட்டில், ஒருசில வாரங்களில் பஞ்சம் பற்றிய அறிவிப்பை வெளியிடக் கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து 23,000 மெட்ரிக் டன் தானியங்களுடன் புறப்பட்டுள்ள கப்பலை எதிர்பார்த்துள்ளதாகவும்,
ஒரு மாத காலத்திற்கு 1.5 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க இது போதுமானது எனவும் தெரிவித்துள்ளனர். குறித்த கப்பலானது Djibouti துறைமுகத்தில் ஆகஸ்டு மாதம் 26 அல்லது 27ம் திகதி வந்து செரும் எனவும்,
அங்கிருந்து சாலை மார்க்கம் மில்லியன் கணக்கான மக்கள் வறட்சியை மட்டுமல்ல, கொடிய மோதலையும் எதிர்கொண்டுள்ள வடக்கு எத்தியோப்பியாவின் டிக்ரே, அஃபர் மற்றும் அம்ஹாரா பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக உணவு திட்டத்திற்கான தானியங்களில் பாதி அளவு உக்ரேனில் இருந்தே கடந்த ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைனிடம் இருந்து சுமார் 150,000 மெட்ரிக் டன் தானியங்களை வாங்க அமெரிக்கா முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தானியங்கள் அனைத்தும் பஞ்சத்தால் அவதிப்படும் ஆப்பிரிக்க மக்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.