ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கி அழித்த உக்ரைன் ஹெலிகாப்டர்கள்! வெளியான வீடியோ ஆதாரம்
உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்கள் ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக பிராந்திய கவர்னர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் Belgorod நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு உக்ரேனிய ராணுவ ஹெலிகாப்டர்கள், ராக்கெட்டுகளை ஏவி எண்ணெய் கிடங்கை தாக்கியதாக Belgorod பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததாகவும், எனினும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை.
துரோகிகள்... தண்டனை உறுதி: உக்ரைன் அதிகாரிகள் மீது கொந்தளித்த ஜெலென்ஸ்கி
தாக்குதலால் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், எண்ணெய் கிடங்கின் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என கவர்னர் தகவல் தெரிவித்துள்ளார்.
There is a fire at an oil storage depot in Belgorod. No cause has been given yet. https://t.co/eUghCPGiKm pic.twitter.com/vb94qeMzOT
— Rob Lee (@RALee85) April 1, 2022
2 நாட்களுக்கு முன் Belgorod நகரில் உள்ள ஆயுத கிடங்கு கட்டிடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
— Rob Lee (@RALee85) April 1, 2022
Belgorod நகரம் உக்ரைன் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.