ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி
ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர், இணையத்தில் கிடைத்த தோழியால் உயிரை இழக்க இருந்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இணையத்தில் கிடைத்த தோழி
ரஷ்ய பாதுகாப்புத்துறையில் அதிகாரி ஒருவருக்கு டேட்டிங் தளம் ஒன்றின் மூலம் போலினா என்னும் பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.
சில மாதங்கள் பழகியபின் அந்த அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவதற்காக போலினா தனது புகைப்படங்களையும் அனுப்பத் துவங்கியுள்ளார்.

பின்னர், அவருக்கு தான் ஒரு பரிசு கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்த போலினா, அதை தன் நண்பர் ஒருவர் கொண்டு வருவார் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த விடயங்களை ரஷ்ய உளவுத்துறை கவனித்துக்கொண்டிருந்திருக்கிறது.
அதன்படி அந்த ’நண்பர்’ பார்சல் ஒன்றைக் கொண்டுவந்து கொடுக்க, தயாராக இருந்த உளவுத்துறை அதிகாரிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
அவர்கொண்டு வந்த பார்சலில் பிரித்தானிய பியர் போத்தல்கள் இரண்டு இருந்துள்ளன.
அவற்றை அதிகாரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்ப, அவற்றில், உட்கொண்டால் சில நிமிடங்களுக்குள் உயிரைப் பறிக்கக்கூடிய பயங்கர நச்சுப்பொருள் ஒன்று கலந்திருந்தது தெரியவந்துள்ளது.
அந்தப் பார்சலைக் கொண்டு வந்த நபரை அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்திவருகின்றனர்.
அவர் உக்ரைன் ராணுவ உளவுத்துறையுடன் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. அந்த பியர் போத்தல்களை கொண்டு அந்த ரஷ்ய அதிகாரிக்குக் கொடுத்தால் 5,000 டொலர்கள் தருவதாக அதைக் கொடுத்தவர்கள் கூறியதாக அவர் கூறியுள்ளார்.
இன்னொரு விடயம் என்னவென்றால், போலினா என்னும் ஒரு பெண் உண்மையில் இல்லவே இல்லை. போலினா, அந்த ரஷ்ய அதிகாரியை மயக்கி ஏமாற்றுவதற்காக AI உதவியுடன் உருவாக்கப்பட்ட விடயம் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.
ஆக, ரஷ்ய அதிகாரிகளை மயக்கி, ஏமாற்றிக் கொல்வதற்காக உக்ரைன் தரப்பு இவ்வித முயற்சிகளில் ஈடுப்பட்டுவருவதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |