ரஷ்யாவைப் புறக்கணித்து அமெரிக்காவில் இருந்து எரிவாயு வாங்கும் ஒரு அண்டை நாடு
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் தற்போது பால்கன் நாடுகள் ஊடாக அமெரிக்காவில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய இருக்கிறது.
அமெரிக்க எரிவாயு
ஞாயிற்றுக்கிழமை ஏதென்ஸில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கிரேக்க பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸை சந்தித்த பின்னர் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

கிரீஸ் தனது பிராந்தியத்தில் ரஷ்ய எரிவாயுவிற்கு மாற்றாக அமெரிக்க எரிவாயுவை அதன் முனையங்களில் நிரப்ப நடவடிக்கை எடுத்துவருகிறது.
உக்ரைன் போர் முடிவுக்கு வராவிட்டால், 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் ரஷ்ய எரிவாயு இறக்குமதியை தடை செய்ய ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியால் உக்ரைன் போருக்கான நிதியை ரஷ்யா திரட்டி வருவதாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
உறையவைக்கும் குளிர்காலத்தை அனுபவிக்கும் உக்ரைனில், ரஷ்யா எரிசக்தி அமைப்புகளைத் தாக்குவதால், எரிசக்தி நெருக்கடி ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
முன்னதாக ஏதென்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, அமெரிக்க எரிவாயு விநியோகம் ஜனவரியில் தொடங்கும் என்று கூறியிருந்தார்.
ரஷ்யர்கள் தாக்குதல் முன்னெடுக்கும் ஒவ்வொரு முறையும் நாங்கள் மீண்டும் கட்டமைக்கிறோம், ஆனால் இதற்கு உண்மையிலேயே நேரம், அதிக முயற்சி, உபகரணங்கள் தேவை.

எரிவாயு தொடர்பில், ரஷ்யர்களால் உக்ரைனின் சொந்த உற்பத்தி சேதப்படுத்தப்பட்டதற்கு ஈடுசெய்ய அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும், மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இறக்குமதிகளை ஈடுகட்ட, ஐரோப்பிய நேச நாடுகள் மற்றும் வங்கிகளிடமிருந்தும், உக்ரேனிய வங்கிகளிடமிருந்தும் எரிவாயு இறக்குமதிக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய
உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா கைப்பற்றியதன் பின்னர், 2015 ஆம் ஆண்டு முதல், ரஷ்ய எரிவாயுவை நேரடியாக வாங்குவதை நிறுத்தியதிலிருந்து, உக்ரைன் பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது.
சோவியத் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட எரிவாயு குழாய்கள் மால்டோவா, ருமேனியா மற்றும் பல்கேரியா வழியாக உக்ரைனை கிரேக்கத்தில் உள்ள எரிவாயு முனையங்களுடன் இணைக்கிறது.

பிப்ரவரி 2022 இல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள், அவர்களில் பெரும்பாலோர் இராணுவத்தினர், கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்,
மேலும் மில்லியன் கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ரஷ்யா தற்போது உக்ரைனின் சுமார் 20 சதவீத நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ஆனால் உக்ரைனிய இராணுவம் ஆள் பற்றாக்குறையுடன் போராடி வருவதால், போர் முனையில் போதுமான முன்னேற்றத்தை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |