ரஷ்யா மீது உக்ரைன் நடத்தியுள்ள மொத்த ட்ரோன் தாக்குதல் எண்ணிக்கை: தாக்குதலுக்கு உள்ளான முக்கிய இடங்கள்
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ரஷ்யா மற்றும் கிரிமியாவில் 190 முறை உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட 18 மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் பெரும் ஆயுதப் பலத்திற்கு முன்னதாக உக்ரைன் உறுதியாக நிலைத்து நிற்க அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இதுவரையிலான போரின் நடுப்பகுதி வரை தடுப்பு தாக்குதல் முறையை மட்டும் செயல்படுத்தி வந்த உக்ரைன், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து போதுமான ஆயுத உதவியை கையிருப்பு பெற்றவுடன் ரஷ்யாவுக்கு எதிரான எதிர்ப்பு தாக்குலை பலமாக முன்வைத்து வருகின்றனர்.
ரஷ்யா மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்
உக்ரைனின் எதிர்ப்பு தாக்குதல் தொடங்குவதாக உக்ரைன் அறிவித்ததில் இருந்து ரஷ்யா மற்றும் கிரிமியாவின் பல பகுதிகளில் உக்ரைன் தொடர் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இருநாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து சுமார் 190 முறை ரஷ்யா மற்றும் கிரிமியாவில் உள்ள பல பகுதிகளில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலின் பெரும்பாலான பகுதியில் ரஷ்ய தலைநகரான மாஸ்கோ, மேற்கு ரஷ்ய எல்லை பகுதிகள் மற்றும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா ஆகியவற்றில் நடத்தப்பட்டுள்ளது.
கிரிமியாவின் சில பகுதியில் கடல் வழி ட்ரோன் தாக்குதலையும் உக்ரைன் முன்னெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |