சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ஆடையில்லாத பெண்கள் உடல்கள்! டாட்டூவை தேடிய ரஷ்யர்கள்... ஆதார புகைப்படங்கள்
உக்ரைனில் எந்த அளவுக்கு ரஷ்ய படையினர் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை காட்டும் அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் 43 நாட்களாக போர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
லிசியா வலிலெங்கோ
அது தொடர்பான புகைப்படங்களும் அவ்வபோது வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அந்த வகையில் உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினரான லிசியா வலிலெங்கோ சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள புறநகர் பகுதிகளில் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களின் சடலமாக நிர்வாண நிலையில் பைக்குள் போடப்பட்டு எடுத்து செல்லப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
#Kyiv suburbia is just one massive war crime evidence scene. Tortured bodies of naked men and women. Reportedly russians were searching for tattoos and signs of support of the resistance. pic.twitter.com/XAiGWWxJjd
— Lesia Vasylenko (@lesiavasylenko) April 6, 2022
அந்த பதிவில். இது ஒரு பாரிய போர்க்குற்றம் நடந்ததற்கான சாட்சி புகைப்படம். நிர்வாணமாக ஆண்களும் பெண்களும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட உடல்கள் தான் இவை.
கதறி அழும் உறவுகள்
தகவலின்படி ரஷ்யர்கள் அவர்களின் உடல்களில் டாட்டூக்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான அடையாளங்கள் இருந்ததா என தேடியும் சோதித்தும் பார்த்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு புகைப்படத்தில் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டு புதைக்கப்படுபவர்களை நினைத்து அவர்களின் அன்புக்குரியார்கள் கதறி அழுவதை வெளியிட்டுள்ளார்.
#Ukraine will restore and rebuild. Every home, every road. We will rise stronger, like we do every day. #WarDay #43 pic.twitter.com/WZB9eMTy3v
— Lesia Vasylenko (@lesiavasylenko) April 6, 2022