அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை: மைகோலைவ் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்!
உக்ரைனின் அரசு அலுவலகம் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்தாலும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா குறைக்காமல் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த செய்வாய்க்கிழமை காலை உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரான மைகோலைவ்(Mykolaiv) நகரில் உள்ள பிராந்திய மாநில நிர்வாக அலுவலகத்தின் மீது ரஷ்ய ராணுவத்தினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
#Миколаїв
— DSNS.GOV.UA (@SESU_UA) April 2, 2022
Рятувальники продовжують розбирати конструкції та вилучати з-під завалів тіла загиблих у будівлі ОДА. На даний час відомо про 31 загиблу особу та 34 постраждалих.
Від ДСНС залучено 35 осіб та 9 одиниць техніки. pic.twitter.com/48RcdcaC31
இதனை தொடர்ந்து இந்த தாக்குதலில் இதுவரை 33 நபர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், 34 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடிபாடுகளை அகற்றி ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர்களை தேடும் மீட்புப் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைன் மாநில அவசர சேவை துறை தெரிவித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைனின் பிராந்திய மாநில நிர்வாக அலுவலக கட்டிடத்தின் மீது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய துளை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.
டாவ்ரிஸ்க் மேயரை காணவில்லை... ரஷ்ய ராணுவம் கடத்தியதா? உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்!