விமானங்களை சுட்டு வீழ்த்தும் புதிய லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ள உக்ரைன்
உக்ரைன் ஒரு புதிய லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக அதன் விமானப் படைத் தலைவர் வடிம் சுகாரெவ்ஸ்கி தெரிவித்தார்.
Tryzub எனப் பெயரிடப்பட்ட இந்த ஆயுதம் 2 கிலோமீட்டர் (1.2 மைல்கள்) உயரத்தில் விமானங்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆயுதத்தின் சிறப்பம்சங்கள்
Tryzub என்பது உக்ரேனின் தேசிய சின்னமான மூன்று முள் வாளுக்கு இணையான பெயருடன் உருவாக்கப்பட்டுள்ளது, இது சுதந்திரம், சக்தி மற்றும் ஒற்றுமையை குறிக்கிறது.
மெதுவாக பறக்கும், குறைந்த உயரத்தில் உள்ள டிரோன்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் இது திறமையானதாக கருதப்படுகிறது.
வணிக ரீதியிலான வேல்டிங் லேசர்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் இது நடைமுறையில் சாத்தியமாகும் என ஆயுத ஆராய்ச்சி நிபுணர் பேட்ரிக் சென்ஃட் கூறியுள்ளார்.
இது 2014-இல் அறிமுகமான அமெரிக்காவின் லேசர் ஆயுத முறைமை LaWS-ஐ ஒத்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது போன்ற லேசர் ஆயுதங்கள் சில நாடுகளில் மட்டுமே உள்ளது. அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன.
உக்ரேனின் டிரைசூப் சோதனையில் வெற்றி பெற்றால், அது ரஷ்ய டிரோன்களை எதிர்க்க முக்கியக் கருவியாக அமையும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukraine new laser weapon Tryzub