ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தான் பதவிக்கு வந்ததும் ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார்.
தற்போது, அது தொடர்பில் அவர் பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறார்.
ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி
இந்நிலையில், உக்ரைனுக்கு பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா உக்ரைனில் முதலீடு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
அது தொடர்பில், அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து உக்ரைனின் தாதுக்கள் சொத்துக்களை மேம்படுத்தும் என்று கூறும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உக்ரைன் சம்மதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, உக்ரைனின் தாதுக்கள் மூலம் கிடைக்கும் வருவாய், உக்ரைன் மற்றும் அமெரிக்கா இணைந்து உருவாக்கும் ஒரு நிதிக்கு (joint fund for Ukraine and America) செல்லும் என உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் அந்த ஒப்பந்தத்தில் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பும் கையெழுத்திட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிப்படையாகக் கூறினால், ரஷ்ய உக்ரைன் போருக்காக உக்ரைனுக்கு அமெரிக்கா நிதி உதவி செய்துவந்ததால், பதிலுக்கு உக்ரைன் 500 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான அமெரிக்காவுக்கு அரிய தாதுக்கள் முதலான விடயங்களைத் தரவேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
ஜெலன்ஸ்கி அதற்கு மறுக்க, அவரை மோசமாக ட்ரம்ப் விமர்சிக்க, இதற்கிடையில் திரைமறைவில் என்ன நடந்ததோ தெரியாது, தற்போது தனது நாட்டின் தாதுக்களிலிருந்து கிடைக்கும் வருவாயை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி கையெழுத்திட உள்ளார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |