இந்தியாவுக்கு வரும் உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி! இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை தீவிரம்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் இந்தியா வருகை குறித்து உக்ரைன் தரப்பு இந்திய தரப்புடன் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த உத்தேச விஜயம் தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
AFPஇந்த விஜயம் உறுதிசெய்யப்பட்டால், ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கிய பின்னர், ஜெலென்ஸ்கியின் முதல் இந்தியா வருகை இதுவாகும்.
ஜெலென்ஸ்கி முன்பு அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று ரஷ்யாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கோரினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (மேற்கு) சஞ்சய் வர்மா, கெய்வ் நாட்டிற்கு விஜயம் செய்தார், அதே நேரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் ட்ஜபரோவா டெல்லிக்கு இராஜதந்திர பேச்சுவார்த்தைக்காக புது தில்லி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
TOI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |