உக்ரைன் பலத்தை அதிகரிக்க அதிரடி முடிவெடுத்தார் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி!
நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு அதிகமாக போராளிகள் தேவைப்படுவதால் இராணுவ சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிரடி முடிவெடுத்துள்ளார்.
கடந்த 24ம் திகதி முதல் தொடர்ந்து 5வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
பிரான்ஸ் உட்பட சில நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அளித்தாலும், வீரர்கள் பற்றாக்குறையால் உக்ரைன் திணறி வருகிறது.
இதற்கிடையில், தேவைப்படும் மக்களுக்கு அரசாங்கமே ஆயுதங்களை வழங்கும் என முன்னதாக ஜெலன்ஸ்கி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று நாட்டை மக்களிடையே உரையாற்றிய ஜெலன்ஸ்கி, நான் உக்ரைனின் ஜனாதிபதியாக பதவியேற்க முடிவு செய்த போது, நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஜனாதிபதி தான் என கூறினேன்.
ஏனெனில், நமது நாட்டிற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு. தற்போது நாம் ஒவ்வொருவரும் போராளி தான், நாம் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
உக்ரைனுக்கு அதிகமான போராளிகள் தேவைப்படுகிறது. எனவே இராணுவ சட்டத்தின் கீழ், நமது நாட்டை பாதுகாக்க உதவ, இராணுவ அனுபவத்துடன் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க நான் அனுமதிக்கிறேன்.
இது ஒரு கடினமான முடிவு, ஆனால் அது நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமானது.
கைதிகள் சண்டை தீவிரமாக இருக்கும் இடங்களில் சண்டையிடுவார்கள் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.