உக்ரைன் போரில் லேசர் துப்பாக்கிகள்: அதிபயங்கர ஆயுதத்தை சோதனையிடும் ரஷ்யா
ரஷ்யா தன்னுடைய ராணுவ திறனை அதிகப்படுத்தும் நோக்கில் லேசர் துப்பாக்கிகளை சோதனை செய்துள்ளது.
லேசர் துப்பாக்கிகள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கிட்டத்தட்ட 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை இருநாடுகளும் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் மாறி மாறி தாக்கி வருகின்றனர்.
இதற்கிடையில் தன்னுடைய ராணுவ பலத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ரஷ்யா பல்வேறு புதிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
Sputnik
அந்த வகையில், ரஷ்யா தன்னுடைய ராணுவ திறனை அதிகப்படுத்தும் நோக்கில் லேசர் துப்பாக்கிகளை சோதனை செய்துள்ளது.
இதற்காக, 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ட்ரோன்களை தாக்கி அழிக்க கூடிய சாடிரா லேசர் மற்றும் 5,500 கி மீ உயரத்தில் உள்ள விண்கலங்களையும் தாக்கி செயலிழக்க செய்யும் பெரெஸ்வெட் லேசர் ஆகியவற்றில் ரஷ்யா முதலீடு செய்துள்ளது.
RUSSIAN MINISTRY OF DEFENSE
ரஷ்ய அதிகாரிகள் தகவல்
இந்த லேசர் துப்பாக்கிகளை தங்களது ராணுவ பயிற்சி மையத்தில் ரஷ்யா சோதனை செய்துள்ளது.
சோதனையின் போது இந்த லேசர் துப்பாக்கிகள் அகச்சிவப்பு கதிர்களை தாக்கி அழிப்பதில் சிறப்பாக செயல்படுவதாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
RUSSIAN MINISTRY OF DEFENSE
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Laser Guns, Laser weapons,