அமைதி ஒப்பந்தம் உறுதியாக 10% மட்டுமே மீதம் உள்ளது: ஜெலென்ஸ்கி அறிவிப்பு
ரஷ்யா உடனான போர் அமைதி ஒப்பந்தம் உறுதியாக இன்னும் 10% மட்டுமே மீதம் இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தின் வாய்ப்புகள் இன்னும் 10% மட்டுமே மீதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சிக்கலாக உள்ள சில விவகாரங்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், பெரும்பாலான விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு பரிசாக அமைப்பும் எந்தவொரு நடவடிக்கையையும் எச்சரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பாவில் நடைபெற்று வரும் மிகப்பெரிய போர் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து, உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
இதற்காக 20 அம்ச அமைதி திட்டத்தை உருவாக்கி இருநாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |