உக்ரைன் ரஷ்யா போர்: விண்ணை தொடும் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை
உக்ரைன் ரஷ்யா இடையிலான 18 மாத போர் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர்
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கியது, கிட்டத்தட்ட 18 மாதங்கள் நடைபெற்று வரும் இந்த போர் நடவடிக்கையில் லட்சக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளனர்.
அத்துடன் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
AP
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் உக்ரைன் தரப்பில் மட்டும் சுமார் 70,000 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அத்துடன் 100,000 முதல் 120,000 வீரர்கள் வரை காயமடைந்துள்ளனர்.
ரஷ்ய தரப்பை பொறுத்தவரை 120,000 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 100,000 முதல் 180,000 வரையிலான வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
Reuters
மேலும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் பொதுமக்கள் 9000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 16,000 பேர் காயமடைந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பகுதிகள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து 11 சதவீத இடங்களை ரஷ்யா தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
கிரிமியாவுடன் சேர்த்தால் மொத்தம் 17.5சதவீத இடங்களை அதாவது உக்ரைனின் 41,000 சதுர கி.மீ இடங்களை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இடம்பெயர்வு
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையால் 5.9 மில்லியன் உக்ரைனிய மக்கள் ஐரோப்பாவிற்கு அகதிகளாக குடியேறியுள்ளனர்.
5 மில்லியன் மக்கள் உள் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர், அத்துடன் தற்போதைய நிலவரப்படி 17.9 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக தேவைப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |