அணு ஆயுத தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள புடின்: முதல் அடி பிரித்தானியாவுக்குத்தானாம்
ரஷ்யாவுக்குள் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்த அமெரிக்கா உக்ரைனுக்கு அனுமதியளித்துள்ள விடயம், மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
அணு ஆயுத தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள புடின்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நேரத்திலேயே, எந்த நாடாவது உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமானால், அந்நாட்டின்மீது அணு ஆயுதம் பிரயோகிக்கப்படும் என எச்சரித்திருந்தார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்.
இந்நிலையில், அணு ஆயுத தாக்குதல் தொடர்பில் புதிய கொள்கை ஒன்றிற்கு புடின் அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி, ரஷ்யாவின் மீது எந்த நாடாவது சாதாரண ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினாலே, அதாவது, உயிரி ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் கதிரியக்க ஆயுதங்கள் இல்லாமல் சாதாரண ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினாலே, அந்த நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தும் உரிமை ரஷ்யாவுக்கு உள்ளது என்கிறது ரஷ்யாவின் புதிய அணு ஆயுதக் கொள்கை.
அப்படியானால், ரஷ்யா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ள நிலையில், உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை ஏவுமானால், பதிலுக்கு ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என்பது அதன் பொருள் என புடினுடைய செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov தெரிவித்துள்ளார்.
அதனால், ரஷ்யா அணு ஆயுத தாக்குதலைத் துவக்கக்கூடும் என்பதால், மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என்னும் அச்சம் உருவாகியுள்ளது.
முதல் அடி பிரித்தானியாவுக்குத்தானாம்
இதற்கிடையில், ரஷ்ய ராணுவ ஜெனரல்களில் ஒருவரான Andrey Gurulev என்பவர், ரஷ்யா அணு ஆயுத பதிலடி கொடுக்கும் நிலையில், தனித்தனியாக நாடுகள் மீது இலக்கு வைத்து, எச்சரிக்கும் விதத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், ரஷ்யாவின் முதல் அணு ஆயுத இலக்கு பிரித்தானியாதான் என்றும் கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |