இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவோம்! கடினமாக இருக்கின்றது.. ஒப்பு கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்யாவுடனான போரில் கடும் சவாலான சூழலிலும் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவோம் என்று ஜெலன்ஸ்கி சபதம் போட்டுள்ள ஜெலன்ஸ்கி கடினமான பகுதிகள் குறித்து ஒப்பு கொண்டுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடரும் நிலையில் கிழக்கு பகுதியில் போர் சண்டை தீவிரமடைந்துள்ளது. கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மாகாணங்களை உள்ளடக்கிய ரஷ்ய எல்லைக்கு மிக அருகில் உள்ள டான்பாஸ் பகுதியில் ரஷ்யா கவனம் செலுத்தி வருகிறது.
கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 97 சதவீதத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், தங்களது படைகள் முன்னேறி வருவதாகவும் தென்கிழக்கு நகரமான ஜபோரிஜியா நகரையும் கைப்பற்ற தங்கள் படைகள் குறிவைத்துள்ளன எனவும் ரஷ்யா கூறியது.
இதற்கு மத்தியில் பத்திரிகை ஒன்றின் இணையவழி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நம் ஒட்டுமொத்த தேசத்தின் மீதான ரஷ்யாவின் கட்டுப்பாட்டை முறியடித்து, மீண்டும் நாம் கட்டுப்பாட்டை பெற வேண்டும். நாங்கள் பதிலடி கொடுப்போம்.
சீவிரோடோனெட்ஸ்க், லைசிசான்ஸ்க், போபாஸ்னா, மிகவும் கடினமான இடங்களாக இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கிழக்கு பகுதியில் உக்ரைன் திணறி வருவதை அவர் உறுதி செய்துள்ளார்.