97 சதவீதத்தை தட்டி தூக்கிவிட்டோம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ரஷ்யா
உக்ரைனின் முக்கிய பகுதியான லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 97 சதவீதத்தை ரஷ்யா பிடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் 100 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. உக்ரைனின் கெர்சன் நகரம் ரஷ்யாவின் வசம் சென்றுள்ளது. இந்த நகரத்தை ரஷ்யா, தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இது தொடர்பாக ரஷ்யா ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தும் என்று அந்த நாட்டினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Representational
இதனிடையில் கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 97 சதவீதத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுபற்றி ரஷ்ய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு கூறுகையில், லுஹான்ஸ்கின் 97 சதவீத பகுதி விடுவிக்கப்பட்டு விட்டது.
செவிரோடொனெட்ஸ்க் நகரில் குடியிருப்பு பகுதிகள் ரஷயா கையில் வந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.