புடினை மட்டுமே ஜெலென்ஸ்கி சந்திப்பார்: அவர் வரவில்லையென்றால்..உக்ரைன் தடாலடி
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி துருக்கி பயணத்தில் புடினை மட்டுமே சந்திப்பார் என உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
துருக்கியில் பேச்சுவார்த்தை
ரஷ்யாவும், உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட, இரு நாடுகளின் தலைவர்களும் பொதுவான இடமான துருக்கியில் சந்தித்து பேச சம்மதித்தனர்.
துருக்கியின் இஸ்தான்புல்லில் வரும் 15ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ரஷ்ய தலைவர் நேரில் சந்திக்கும் முன்மொழிவை ஜெலென்ஸ்கி ஏற்றுக்கொண்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் "அது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால்; இஸ்தான்புல்லில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வேன்" என்று கூறினார்.
புடினை மட்டுமே சந்திப்பார்
ஆனால், விளாடிமிர் புடின் (Vladimir Putin) துருக்கிக்கு செல்வாரா என்பதை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் ஜெலென்ஸ்கியின் ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக், "உக்ரைன் ஜனாதிபதி இந்த வாரம் துருக்கிக்கு அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பயணம் செய்வார். அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மட்டுமே சந்திப்பார்; கீழ்மட்ட ரஷ்ய அதிகாரிகளை அல்ல.
புடின் வரவில்லை என்றால், அமைச்சர்கள் போன்ற உயர்மட்ட ரஷ்ய அதிகாரிகள் கூட, போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அடிப்படை முடிவுகளை எடுக்க முடியாது. அதாவது, போரை தொடர அல்லது போரை நிறுத்த புடின் மட்டுமே முடிவெடுக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |