பாம்பு தீவில் ரஷ்ய போர் விமானம் தாக்குதல்: பரபரப்பு வீடியோ
உக்ரைனின் பாம்பு தீவில் ரஷ்ய போர் விமானங்கள் இரண்டு பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைனுக்கு சொந்தமான பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கிய நிலையில், அந்த தீவின் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தியுள்ளது.
கருங்கடலின் உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை ஒழுங்கமைக்கும் ஐ.நாவின் முயற்சிகளுக்கு ரஷ்யா எத்தகைய தடைகளும் ஏற்படுத்தவில்லை என்பதை காட்டுவதற்காகவும், நல்லெண்ண நோக்கின் அடிப்படையில் பாம்பு தீவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
A Russian airstrike upon the Snake Island that is unmanned now following their withdrawal.
— Illia Ponomarenko ?? (@IAPonomarenko) July 1, 2022
Destroying the weapons they could not evacuate? pic.twitter.com/SsfGLVx7kK
இந்தநிலையில் ரஷ்ய படைகள் வெளியேறிய ஓரிரு நாள்களுக்கு பிறகு, ரஷ்யாவின் இரண்டு Su-30 போர் விமானங்கள் பாஸ்பரஸ் குண்டுகளை தீவின் மீது வீசி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் ராணுவத்தின் தளபதி வலேரி ஜலுஷ்னி வெள்ளிக்கிழமை டெலிகிராமில் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியன் தீபகற்பத்தில் இருந்து பறந்து வந்த இரண்டு வகையான ரஷியன் Su-30 போர் விமானங்கள் முலம் பாம்பு தீவின் மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யா தங்களது சொந்த அறிவிப்புகளை கூட மதிக்காது என உக்ரைன் ராணுவம் வெள்ளியன்று குற்றம்சாட்டியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: தரைமட்டமான நகரம்...ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: மீட்பு பணிகள் தீவிரம்
பாம்பு தீவில் இருந்து நல்லெண்ண அடிப்படையில் ரஷ்ய ராணுவம் வெளியேறியதாக தெரிவித்து இருந்த நிலையில், உக்ரைனின் அடுத்தடுத்த தாக்குதலால் தான் ரஷ்ய ராணுவம் பாம்பு தீவில் இருந்து வெளியேறியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து வருகிறது.